/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பேரூராட்சியானது காளையார்கோவில் பொதுமக்கள் வரவேற்பு
/
பேரூராட்சியானது காளையார்கோவில் பொதுமக்கள் வரவேற்பு
பேரூராட்சியானது காளையார்கோவில் பொதுமக்கள் வரவேற்பு
பேரூராட்சியானது காளையார்கோவில் பொதுமக்கள் வரவேற்பு
ADDED : ஜன 02, 2025 05:08 AM
சிவகங்கை: மாவட்டத்தில் புதுவயல் பேரூராட்சியுடன் வீரசேகரபுரம் ஊராட்சியில் உள்ள 6 வது வார்டு முழுவதும், சிங்கம்புணரி பேரூராட்சியுடன் அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட வார்டு எண் 5 முதல் 9 வரையிலான பகுதிகள், திருப்புத்துார் பேரூராட்சியுடன் ரணசிங்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டாம்பூர் வார்டு 8 ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
பேரூராட்சியாக தரம் உயர்வு: காளையார்கோவில்ஊராட்சி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பேரூராட்சியாக தரம் உயர்த்தும் திட்டமும் தற்போது நிறைவேறியுள்ளது. அதன்படி காளையார்கோவில் பேரூராட்சியின் கீழ் காளையார்கோவில், மாந்தாளி, மேட்டுப்பட்டி, ஊத்துப்பட்டி, சீகூரணி ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகள் காளையார்கோவிலுடன் இணைத்து பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காளையார்கோவிலின் மக்கள் தொகை 33 ஆயிரத்து 82 ஆக உயரும்.

