/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிரான்மலை திருவிழாவில் முல்லைக்கு தேர் கொடுத்த வேள்பாரி
/
பிரான்மலை திருவிழாவில் முல்லைக்கு தேர் கொடுத்த வேள்பாரி
பிரான்மலை திருவிழாவில் முல்லைக்கு தேர் கொடுத்த வேள்பாரி
பிரான்மலை திருவிழாவில் முல்லைக்கு தேர் கொடுத்த வேள்பாரி
ADDED : மே 08, 2025 03:20 AM

பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் வள்ளல் பாரி மன்னன் முல்லைக்கு தேர் கொடுக்கும் நிகழ்வு நடந்தது.
குன்றக்குடி ஆதினத்துக்குட்பட்ட இக்கோயிலில் சித்திரைத் திருவிழா மே 1ல் தொடங்கியது. மே 5ல் திருக்கல்யாணம் நடந்த நிலையில், நேற்று வள்ளல் பாரிவிழா நடந்தது. பாரம்பரிய முறைப்படி வள்ளல் பாரி வேட்டைக்குச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. வேட்டை முடிந்து திரும்பி வரும்போது சங்க இலக்கியத்தை நினைவுபடுத்தும் விதமாக முல்லைக்கு தேர் கொடுக்கும் வைபவம் நடந்தது.
கோயில் நுழைவுவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த தேரில் முல்லைக்கொடியை குன்றக்குடி பொன்னம்பல அடிகள் படரவிட்டார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ., ராம.அருணகிரி கற்பூரசொக்கலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நாளை மே 9ம் தேதி கோயிலில் தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 3:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளுகின்றனர்.
அதிகாலை 5:30 மணிக்கு தேரோட்டம் துவக்கி வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வந்து மாலை 5:00 மணிக்கு நிலையை அடையும். விழாவிற்கான ஏற்பாடுகளை குன்றக்குடி ஆதினம், பிரான்மலை கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.