/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்மாய்க்கு சொட்டு நீர்கூட வரவில்லை; இளையான்குடி கிராம மக்கள் கவலை
/
கண்மாய்க்கு சொட்டு நீர்கூட வரவில்லை; இளையான்குடி கிராம மக்கள் கவலை
கண்மாய்க்கு சொட்டு நீர்கூட வரவில்லை; இளையான்குடி கிராம மக்கள் கவலை
கண்மாய்க்கு சொட்டு நீர்கூட வரவில்லை; இளையான்குடி கிராம மக்கள் கவலை
ADDED : நவ 06, 2025 08:17 AM

இளையான்குடி : இளையான்குடியில் உள்ள பெரும்பாலான வைகை பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் ஒரு சொட்டு கூட வராததால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
இளையான்குடி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 30க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு வைகை ஆற்றிலிருந்து கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.இப்பகுதி வானம் பார்த்த பகுதி என்பதால் பெய்கிற மழையை பொறுத்து பெரும்பாலான விவசாயிகள் மானாவாரியாக நெல் விதைகளை தூவி வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையை நம்பி பெரும்பாலான விவசாயிகள் மீண்டும் நெல் விதைகளை தூவிய பிறகு நெற்பயிர்கள் நன்றாக முளைத்து வரும் நேரத்தில் போதிய தண்ணீர் இல்லாமல் பெரும்பாலான பகுதிகளில் கருகி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
30க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் வரும் நிலையில் இந்த வருடம் வைகையில் தண்ணீர் திறக்கும் போது நெட்டூர், குறிச்சி,பிராமணக்குறிச்சி, கச்சாத்தநல்லூர் உள்ளிட்ட சில கண்மாய்களுக்கு மட்டுமே குறைந்த அளவு தண்ணீர் வந்துள்ளது. மேலும் இளையான்குடி, சாலைக்கிராமம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 25க்கும் மேற்பட்ட கண்மாய்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வராததால் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் கவலையில் கண்ணீர் விட்டு வருகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது:
வைகை ஆற்றில் வரும் தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வருகிறோம். கடந்த இரு வாரங்களுக்கும் மேல் மழை இல்லாததால் நெற்பயிர்கள் கருகி வருகின்றன. ஏற்கனவே 2 முறை விதை நெல்களை தூவிய நிலையில் தற்போது பெரும்பான்மையான வைகை பாசன கண்மாய்களில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாததால் நெற்பயிர்கள் முழுமையாக கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் இளையான்குடி பகுதியில் உள்ள அனைத்து வைகை பாசன கண்மாய்களுக்கும் போதுமான அளவிற்கு வைகை தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

