/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வாக்காளர் கணக்கெடுப்புப் படிவத்தை ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்க வேண்டும்
/
வாக்காளர் கணக்கெடுப்புப் படிவத்தை ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்க வேண்டும்
வாக்காளர் கணக்கெடுப்புப் படிவத்தை ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்க வேண்டும்
வாக்காளர் கணக்கெடுப்புப் படிவத்தை ஓட்டுச்சாவடி அலுவலரிடம் வழங்க வேண்டும்
ADDED : நவ 09, 2025 06:57 AM
சிவகங்கை: வாக்காளர் கணக் கெடுப்பு படிவத்தை முழுவதுமாக பூர்த்தி செய்து கையொப்பமிட்டு தொடர்புடைய ஓட்டுச் சாவடி நிலை அலுவலர் களிடம் (பி.எல்.ஓ) மட்டுமே வழங்கிட வேண்டும் என கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டு உள்ளார்.
அவர் கூறுகையில், 2026 ஜன.1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு சிவகங்கை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அக்.27ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் சுய விபரங்கள் பகுதியாக பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் இரட்டைப் பிரதிகளில் சம்பந்தப்பட்ட ஓட்டுச் சாவடி நிலை அலுவலர் களால் வரும் டிச.4ம் தேதி வரை வாக்காளர்களது வீடு களுக்கு சென்று வழங்கப்படவுள்ளது.
படிவங்களை குடும்பத்தில் உள்ள இதர நபர்கள் சார்பாக 18 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர் எவரேனும் ஒருவர் அந்த பகுதிக்கான பி.எல்.ஓக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
கணக்கெடுப்பு படிவங் களை பெற்ற வாக் காளர்கள் கணக்கெடுப்புப் படிவத்தை முழுவதுமாக பூர்த்தி செய்து கையொப்பமிட்டு தொடர்புடைய ஓட்டு நிலை அலுவலர் களிடம் மட்டுமே வழங்க வேண்டும். வேறு எவரிடமும் பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை வழங்கக்கூடாது.
நிலை அலுவலர்கள் கணக்கெடுப்புப் படி வத்தின் ஒரு பிரதியைப் பெற்றுக்கொண்டு அவர் களது பி.எல்.ஓ., செயலியில் உள்ளீடு செய்வார்கள். ஒரு பிரதியில் கையொப்பமிட்டு அந்தந்த வாக்காளர்களிடத்தில் வழங்குவர். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து நபர்களுடைய படிவங்களையும் அக் குடும்பத்தின் மூத்த உறுப்பினர், இதர உறுப்பினர்கள் சார்பாக கையொப்ப மிடலாம்.
கணக்கெடுப்பின் போது தங்களது குடும் பத்தில் இறந்த உறுப் பினர்கள் பெயர், இரட்டைப் பதிவு நிரந்தர மாக வெளியூர் சென்று விட்ட நபர்கள் குறித்த விபரங்களை நிலை அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். கணக் கெடுப்புப் பணியின் போது வாக்காளர்கள் கணக்கெடுப்புப் படிவத்தை மட்டும் வழங்கினால் போதும், எவ்வித இதர ஆவணங்களையும் இணைத்து வழங்க வேண்டியதில்லை.
2002, 2025ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் அல்லது தங்களது உறவினர் பெயர் குறித்த விபரங்களை elections.tn.gov.in/Electoralrolls.aspx என்ற இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
https://voters.eci.gov.in என்ற வலைதள முகவரியின் வாயிலாகவும் வாக்கா ளர் சுயவிபரங்களை அறிந்து கொள்ளலாம் என்றார்.

