/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மணிமுத்தாற்றில் ஒரே நாளில் நீர் வரத்து நின்றது
/
மணிமுத்தாற்றில் ஒரே நாளில் நீர் வரத்து நின்றது
ADDED : அக் 31, 2025 11:32 PM
திருப்புத்துார்: திருக்கோஷ்டியூர் பகுதி கண்மாய்களுக்கு நீர்வரத்து வரும் மணிமுத்தாற்றில் ஒருநாளுடன் நின்றது.
அண்மையில் பெய்த மழையால் மதுரை மாவட்டத்தில் உபரிநீர் பெருகி 3 நாட்களுக்கு முன் மணிமுத்தாற்றில் நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் ஏரியூர் கண்மாய் பெருகி, கலுங்கு மறுகால் சென்றது. கலிங்கப்பட்டி தடுப்பணையில் நிறைந்த நீரில் அப்பகுதியினர் குளித்தனர். இதனால் திருக்கோஷ்டியூர் பகுதியில் 35க்கும் மேற்பட்ட கண்மாய்கள் பெருகும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் ஒரு நாள் மட்டுமே மணிமுத்தாறில் நீர்வரத்து சென்றது. இதனால் திருக்கோஷ்டியூர் கண்மாய்களுக்கு நீர்வரத்து தொடரவில்லை. இப்பகுதியில் மழையும் எதிர்பார்த்தபடி பெய்யவில்லை. தொடர்ந்து சிலநாட்களாவது மணிமுத்தாறில் நீர் ஓடினால் தான் இப்பகுதியில் 35 கண்மாய்கள் பெருகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். இதனால் மீண்டும் மழையை நம்பி விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

