/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரி உப்பாற்றில் வந்த தண்ணீர்
/
சிங்கம்புணரி உப்பாற்றில் வந்த தண்ணீர்
ADDED : அக் 30, 2024 05:26 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரி உப்பாற்றில் பல வருடங்களுக்கு பிறகு தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் உருவாகும் உப்பாறு பல்வேறு ஊர்களை கடந்து சிங்கம்புணரியில் பட்டகோவில்களம் அருகே பாலாற்றுடன் கலக்கிறது.
இந்த ஆற்றின் சொக்கலிங்கபுரத்துக்கு மேற்கே சில ஆண்டுகளாக சிலர் மண்ணால் தடுப்பணை அமைத்து தண்ணீரை திருப்பினர். இதனால் இந்த ஆற்றின் தண்ணீர் சிங்கம்புணரி மற்றும் கீழ்வடிப்பகுதி கிராமங்களுக்கு கிடைக்காமல் போனது. சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதி விவசாயிகளின் அதிருப்தி தெரிவித்த நிலையில், அதிகாரிகள் மண் தடுப்பை அகற்றினர். இதனால் இந்த ஆண்டு உப்பாற்றில் தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது. ஏற்கனவே பாலாற்றில் இரண்டாவது முறையாக தண்ணீர் வரும் நிலையில் உப்பாற்று தண்ணீரும் கலந்து ஓடுவதால் நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர் மட்டம் உயரத்தொடங்கியுள்ளது.

