/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோடையில் வைகை ஆற்றில் வரமாக வந்த தண்ணீர் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
/
கோடையில் வைகை ஆற்றில் வரமாக வந்த தண்ணீர் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
கோடையில் வைகை ஆற்றில் வரமாக வந்த தண்ணீர் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
கோடையில் வைகை ஆற்றில் வரமாக வந்த தண்ணீர் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
ADDED : மே 16, 2025 03:20 AM

மானாமதுரை: மானாமதுரையில் கோடைகாலத்தில் வைகை ஆற்றில் வரமாக வந்த தண்ணீரால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
மதுரை மாவட்டம் விரகனுார் மதகு அணையிலிருந்து மானாமதுரை வழியாக ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் மதகு அணை வரை உள்ள வைகை ஆற்று பகுதியில் மதுரை,அருப்புக்கோட்டை, சிவகங்கை,திருப்புவனம், மானாமதுரை சாயல்குடி, முதுகுளத்தூர் போன்ற ஊர்களுக்கான கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு ஆழ்குழாய், உறை கிணறு மூலம் கிடைக்கும் தண்ணீரைக் கொண்டு 500க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
2 மாதங்களாக கோடை வெயில் கடுமையாக இருப்பதால் வைகை ஆற்றில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஒரு சில ஊர்களுக்கு போதுமான குடிநீர் சப்ளை செய்ய முடியாமல் ஊராட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன. கடந்த வாரம் மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவிற்காக வைகை அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 2 நாட்களுக்கு முன்பு மானாமதுரை பகுதி வைகை ஆற்றை தாண்டி சென்றது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் ஓரளவிற்கு உயர்ந்ததால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் கிடைக்கும் வாய்ப்புள்ளதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.