/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை கோயில்களில் திருக்கல்யாண விழா கந்த சஷ்டி நிறைவு
/
சிவகங்கை கோயில்களில் திருக்கல்யாண விழா கந்த சஷ்டி நிறைவு
சிவகங்கை கோயில்களில் திருக்கல்யாண விழா கந்த சஷ்டி நிறைவு
சிவகங்கை கோயில்களில் திருக்கல்யாண விழா கந்த சஷ்டி நிறைவு
ADDED : அக் 29, 2025 07:56 AM

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட முருகன் கோயில்களில் கந்த சஷ்டியை முன்னிட்டு நேற்று தெய்வானை முருகன் திருக்கல்யாணம் நடைபெற்றது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலில் வீற்றிருக்கும் சுப்பிரமணியர் சன்னதியில் அக்., 22 அன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம் சூரசம்ஹாரம், சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. நேற்று மாலை 5:45 மணிக்கு சுப்பிரமணியர், தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. காப்பு கட்டுதல் களைதலுடன் கந்த சஷ்டி விழா நிறைவு பெற்றது.
* குன்றக்குடி சண்முக நாத பெருமான் கோயிலில் நேற்று காலை 11:00 மணிக்கு சண்முகநாத பெருமானுக்கு மகா அபிேஷகம் நடந்தது. நேற்று மாலை 6:15 முதல் இரவு 7:00 மணிக்குள் தெய்வானை முருகனின் திருக்கல்யாணம் நடந்தது.
* சிவகங்கை அருகே கோவானுாரில் உள்ள சுப்பிரமணியர் கோயில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் தெய்வானை, சுப்பிரமணியர் திருக்கல்யாணம் நடைபெற்றது.
* கானாடுகாத்தான் சவுந்திரநாயகி சமேத கைலாசநாதர் கோயிலில் சுப்பிரமணியருக்கு காப்பு கட்டுடன் அக்., 22 ல் கந்த சஷ்டி விழா துவங்கியது. தினமும் காலை 10:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. நேற்று காலை 10:30 மணிக்கு சுப்பிரமணியர், தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
மானாமதுரை மானாமதுரை வழிவிடு முருகன் கோயிலில் கடந்த வாரம் கந்த சஷ்டி விழாவிற்காக பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். தினந்தோறும் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை, பூஜைகள் நடைபெற்று வந்தன.நேற்று முன்தினம் சூரசம்ஹார விழா நடந்தது. நேற்று திருக்கல்யாணத்திற்காக உற்ஸவர் வள்ளி, தெய்வானையுடன் முருகன் சுவாமி கோயில் முன் மண்டபத்தில் எழுந்தருளினார். பூஜை செய்த பின்பு மாலைகளை மாற்றி திருக்கல்யாணம் நடந்தது. மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில்,அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும் உள்ள முருகன் சன்னதியில் திருக்கல்யாணம் நடைபெற்றது.

