/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ஆடி பிறக்கும் முன்னரே வீசும் காற்று கண்களை பதம் பார்க்கும் புழுதி மண்

ADDED : ஜூலை 01, 2025 02:39 AM

மானாமதுரை: மானாமதுரையில் ஆடி பிறப்பதற்கு முன்னரே பலத்த காற்று வீச துவங்கியுள்ளதால் ரோடு ஓரங்களில் கிடக்கும் மண் பறந்து வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது.
'ஆடி காற்றில் அம்மியும் பறக்கும்'என்ற பழமொழிக்கேற்ப மானாமதுரையில் ஆடி துவங்கும் முன்னரேசில நாட்களாக பலத்த காற்று வீச துவங்கியுள்ளது. மானாமதுரை, சிவகங்கை, தாயமங்கலம், பரமக்குடி செல்லும் ரோடுகளின் ஓரத்தில் அதிக அளவில் மண் குவியல் காணப்படுகிறது. பலத்த காற்று வீசும் போது பறக்கும் துாசியால் சைக்கிள் மற்றும் டூவீலர்களில் செல்பவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
நெடுஞ்சாலை துறை, உள்ளாட்சிஅமைப்பினர் உடனடியாக ரோட்டின் ஓரங்களில் கிடக்கும் மணல் குவியலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.