/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மருத்துவமனைக்கு கத்தியுடன் வந்த பெண்
/
மருத்துவமனைக்கு கத்தியுடன் வந்த பெண்
ADDED : செப் 19, 2024 02:20 AM

சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கத்தியுடன் தனது உறவினரை பார்க்க வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை அருகே உள்ள கல்குளத்தைச் சேர்ந்தவர் இந்திராணி. இவருக்கும் அவரது உறவினர் காளீஸ்வரிக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இந்திராணியை காளீஸ்வரி உறவினர்கள் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இந்திராணி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தகவலை அறிந்த இவரது சகோதரி வள்ளி, மதுரையிலிருந்து கத்தியோடு மருத்துவமனைக்கு வந்து அங்கிருந்த உறவினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ்காரார் ஆனந்த் அவரை தடுத்து கத்தியை பறித்தார். தனது தங்கையை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வள்ளி ஆத்திரத்தில் கத்தினார். அவரை போலீசார் சமரச படுத்தி எச்சரித்து அனுப்பினர்.