/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொடங்கியது ஆடிக் காற்று மரங்களை வெட்டும் பணி
/
தொடங்கியது ஆடிக் காற்று மரங்களை வெட்டும் பணி
ADDED : ஜூலை 15, 2025 03:37 AM

திருப்புவனம்: ஆடி காற்று பலமாக வீச தொடங்கிய நிலையில்மரக்கிளைகளை முன்னெச்சரிக்கையாக வெட்டி அகற்றி வருகின்றனர்.
ஆடியில் பலத்த காற்று வீசுவது வழக்கம். இந்தஆண்டு ஜூலை 17ம் தேதி ஆடி பிறக்கிறது. கடந்த சில தினங்களாக காற்று வீசினாலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் காற்றின் வேகம் தெரியவில்லை.
நேற்று காலை முதலே திருப்புவனத்தில் பலத்த காற்று வீச தொடங்கியது. காற்று காரணமாக திருப்புவனம் காவல் நிலையம் அருகே கூட்டுறவு வங்கி முன்பு மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி சப்தத்துடன் தீப்பொறி பறந்தது. சாலையில் நடந்து சென்றவர்கள் பதறினர்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உதவி ஆணையர் அலுவலகம் முன் பழமை வாய்ந்த நாவல் மரம் இருந்தது. பலத்த காற்று வீசியதால் பாதுகாப்பு கருதி கிளைகளை வெட்டி அகற்றி வருகின்றனர். வரும் காலங்களில் காற்று வீசுவது அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் பழுதான மின் கம்பிகளை மாற்றியமைக்க வேண்டும், காற்று காரணமாக அறுந்து விழ வாய்ப்ப்புள்ள மின் கம்பிகளை பழுது பார்க்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.