/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் அரைகுறையாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி
/
திருப்புவனத்தில் அரைகுறையாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி
திருப்புவனத்தில் அரைகுறையாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி
திருப்புவனத்தில் அரைகுறையாக குடிநீர் குழாய் பதிக்கும் பணி
ADDED : மார் 07, 2024 05:39 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி அரைகுறையாக நிறைவேற்றப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
திருப்புவனம் பேரூராட்சியில் அம்ருத் திட்டத்தின் கீழ் 18 வார்டுகளிலும் கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வந்தது. நெடுஞ்சாலையில் இருந்து தெருக்களுக்கு சிறிய குழாய்களும், வீடுகளுக்கு சின்னஞ்சிறிய குழாய்களும் பதிக்கப்பட்டன.
தெருக்கள் முழுவதும் இயந்திரங்களை வைத்து குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன. இதில் பல இடங்களில் பேவர் பிளாக் கற்கள் பதித்த சாலைகள், தார்ச்சாலைகள், சிமென்ட் சாலைகள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டு குழாய்களை பதித்தனர்.
அதன்பின் அவற்றை சரி செய்யாமல் அப்படியே விட்டு விட்டனர். இதனால் தெருக்களில் நடந்து கூட செல்ல முடியவில்லை. தேரடி வீதி, புதுத்தெரு, பெரியகோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே சாலைகளில் பள்ளங்கள் இருப்பதால் அவசரத்திற்கு எந்த வாகனமும் சென்று வர முடியவில்லை.
தொடர்ச்சியாக பள்ளங்கள் இருப்பதால் வாகனங்களும் சேதமடைந்து வருகின்றன. திருப்புவனத்தில் தொடர்ச்சியாக இந்த மாதம் முழுவதும் திருவிழாக்கள் நடைபெற உள்ளன. தெருக்கள் குண்டும் குழியுமாக இருப்பதால் அக்னிசட்டி ஏந்தி வீதிகளில் வரும் சாமியாடிகள் தடுமாறி விழுந்து காயமடையும் வாய்ப்புள்ளது.
இதே போல அருப்புக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்திற்காக உச்சிமாகாளியம்மன் கோயில் தெருவில் பேவர் பிளாக் கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டன. இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் இன்று வரை சரி செய்யப்படவில்லை.
எனவே பேரூராட்சி நிர்வாகம் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சரி செய்ய வேண்டும்என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

