/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பொங்கலை முன்னிட்டு திருப்புவனத்தில் நுால் கயிறுகள் தயாரிப்பு பணி மும்முரம்
/
பொங்கலை முன்னிட்டு திருப்புவனத்தில் நுால் கயிறுகள் தயாரிப்பு பணி மும்முரம்
பொங்கலை முன்னிட்டு திருப்புவனத்தில் நுால் கயிறுகள் தயாரிப்பு பணி மும்முரம்
பொங்கலை முன்னிட்டு திருப்புவனத்தில் நுால் கயிறுகள் தயாரிப்பு பணி மும்முரம்
ADDED : ஜன 06, 2025 12:13 AM

திருப்புவனம்; சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சொட்டதட்டி, பனையூர், சயனாபுரம் பகுதிகளில் ஜல்லிகட்டு காளைகளுக்கான பிடிகயிறு தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பொங்கல் திருநாள் மூன்று நாட்கள் கொண்டாடப்படும். நெல் அறுவடைக்கு பின் சூரிய பகவானுக்கும், விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்த கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கவும் விழா நடத்துவது வழக்கம்.
பொங்கல் திருநாளுக்கு மறுநாள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளுக்கு மாட்டுப்பொங்கல் கொண்டாடுவார்கள். அன்றைய தினம் கால்நடைகளை குளிப்பாட்டி பொட்டு வைத்து புது கயிறு பொருத்தி, மாலை, புது துண்டு, வேட்டி அணிவித்து பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.
ஆண்டுக்கு ஒரு முறை பசு, காளைகளுக்கு மூக்கணாங்கயிறு, பிடி கயிறு, கழுத்து கயிறுகளை புதுதாக அணிவிப்பார்கள்.
இதற்காக திருப்புவனம் கீழடி அருகே சொட்டதட்டி, சயனாபுரம், பனையூரில் குழுவாக சேர்ந்து கயிறு தயாரிக்கின்றனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்த பட்சம் 100 பேர் முதல் 150 பேர் வரை இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கும் கயிறுகள் தமிழகம் மட்டுமின்றி வடமாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கிறது.
மதுரையில் இருந்து நூல்களை எடை கணக்கில் வாங்கி வந்து தொழிலாளர்களிடம் கொடுத்துவிடுவர். இங்கு தொட்டில் கயிறு, திருமாங்கல்ய கயிறு, காளைகளுக்கான பிடி கயிறு, மூக்கணாங்கயிறு, கழுத்து கயிறு, கன்று குட்டிகளுக்கு முகத்தில் மாட்டப்படும் கூடு கயிறுகள் தயாரித்து விற்கின்றனர்.
இங்கு பச்சை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், வெள்ளை போன்ற நிறங்களில் கயிறு தயாரிக்கின்றனர். இருப்பினும்வெள்ளை நிற கயிறுக்கு கிராக்கி அதிகமாக உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.