/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் 5 கடைகளில் திருட்டு
/
திருப்புத்துாரில் 5 கடைகளில் திருட்டு
ADDED : ஜூலை 22, 2025 11:47 PM
திருப்புத்துார்; திருப்புத்துார் சிவகங்கை ரோட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் 5 கடைகளில் பூட்டை உடைத்து பணம்,வெள்ளி திருடு போனது.
நேற்று காலை திருப்புத்துார் சிவகங்கை ரோட்டில் கொட்டகை பொருட்கள் கடையை திறக்க வந்தவர், அருகிலுள்ள கடைகளில் பூட்டு உடைத்திருப்பதைப் பார்த்து கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
போலீசார் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்த கடைகளை திறந்து விசாரித்தனர். கதிர்வேல் என்பவரின் அடகுக் கடையில் 10 ஜோடி வெள்ளிக் கொலுசு, ரவி என்பவரின் அடகுக் கடையில் 6 ஆயிரம் ரொக்கம், சலூன்கடையில் ரூ.1500, நுட வைத்தியசாலையில் ரூ.2 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.