/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நாட்டரசன்கோட்டை சர்ச்சில் திருட்டு
/
நாட்டரசன்கோட்டை சர்ச்சில் திருட்டு
ADDED : அக் 07, 2025 08:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை பனங்காடி ரெகோபோத் திருச்சபை சர்ச்சில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இந்த சர்ச்சில் பாஸ்டராக இருப்பவர் ஆரோக்கியசாமி. இவர் அக்., 4ல் சர்ச்சை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது சர்ச்சின் கதவில் இருந்த பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்தன. மர்மநபர்கள் உள்ளே புகுந்து சர்ச்சில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான கீ போர்டு, அலைபேசி, டிவி., லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது. இதில் ஈடுபட்டவர்களை எஸ்.ஐ., சக்திவேல் மற்றும் போலீசார் தேடி வருகின்றனர்.