/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பனை மர விதை சேகரிப்பு; 100 நாள் திட்டத்தில் நடவடிக்கை
/
பனை மர விதை சேகரிப்பு; 100 நாள் திட்டத்தில் நடவடிக்கை
பனை மர விதை சேகரிப்பு; 100 நாள் திட்டத்தில் நடவடிக்கை
பனை மர விதை சேகரிப்பு; 100 நாள் திட்டத்தில் நடவடிக்கை
ADDED : அக் 08, 2025 12:01 AM

திருப்புவனம் : திருப்புவனம் அருகே லாடனேந்தலில் 100 நாள் திட்டத்தின் கீழ் பனை மர விதைகளை கடந்த இரு நாட்களாக பெண்கள் சேகரித்து வருகின்றனர்.
லாடனேந்தலில் 2016ல் ஒருங்கிணைந்த காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் ஆறு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் நர்சரி கார்டன் உருவாக்கப்பட்டது. 12 ஏக்கர் பரப்பளவில் நாற்றங்கால் பண்ணை அமைத்து மா, புளி, வேம்பு, பூவரசு உள்ளிட்ட பல்வேறு ரக மரக்கன்றுகளை வளர்த்து கிராமப்புற கண்மாய், குளம், சாலையோரம் நடவு செய்ய அனுப்பப்படுகிறது. நாற்றங்கால் பண்ணையிலேயே 3340 மரங்கள் கொண்ட காடுகள் உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது பனம்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில் பனை மரம் வளர்ப்பிற்காக விதைகள் சேகரிக்க தொடங்கியுள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலையில் பாப்பாங்குளம் விலக்கில் சாலையின் இருபுறமும் 50க்கும் மேற்பட்ட பனை மரங்களில் இருந்து பனம்பழங்கள் சாலையோரம் உதிர்ந்துள்ளது.
இரு நாட்களாக 100 நாள் திட்டத்தின் கீழ் பெண்கள் பனை மர விதைகளை சேகரித்து வருகின்றனர். இதுவரை ஆயிரம் விதைகள் வரை சேகரித்துள்ள நிலையில் அவற்றை சுத்தம் செய்து மர கன்றுகள் உருவாக்க உள்ளனர்.
இருளாயி கூறுகையில்: தற்போது பனம்பழ சீசன் என்பதால் பல இடங்களில் பழங்கள் உதிர்ந்து கிடக்கின்றன.
இவற்றை சேகரித்து பனை மர கன்றுகள் உருவாக்கும் முயற்சியில் உள்ளோம்.
மேலும் லாடனேந்தல் நாற்றங்கால் பண்ணையில் ஏராளமான மரகன்றுகள் உற்பத்தி செய்து திருப்புவனம் ஒன்றியம் முழுவதும் கிராமப்புறங்களில் நடவு செய்ய அனுப்பி உள்ளோம், என்றார்.