ADDED : நவ 11, 2024 04:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மேலப்பட்டியில் மின் டிரான்ஸ்பார்மரில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 110 கிலோ காப்பர் கம்பிகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
சிங்கம்புணரி அருகே மேலப்பட்டியில் உள்ள மின் டிரான்ஸ்பார்மரை நவ.,7 ம் தேதி இரவு மர்ம நபர்கள் ஆப் செய்துள்ளனர். சிறிது நேரம் மின்வெட்டு நிலவியது. இந்த நேரத்திற்கு இடையே மர்மநபர்கள் டிரான்ஸ்பார்மரில் பொருத்தியிருந்த ரூ.1லட்சம் மதிப்புள்ள 110 கிலோ எடையுள்ள காப்பர் கம்பிகளை திருடி சென்றனர். எஸ்.வி., மங்கலம் மின்வாரிய அலுவலர்கள் போலீசில் புகார் செய்தனர். சிங்கம்புணரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.