/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோயில்களில் வெண்கல மணி திருட்டு
/
கோயில்களில் வெண்கல மணி திருட்டு
ADDED : டிச 08, 2025 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: கல்லல் அருகே நான்கு கிராமங்களில் கோயில்களில் வெண்கல மணிகளை திருடியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கல்லல் அருகே வேப்பங்குளத்தில் உச்சகாஞ்சி கோவிலில் 75 கிலோ எடையுள்ள வெண்கல மணி, வடகரை காளியம்மன் கோவிலில் 200 கிலோ எடையுள்ள மணி, டிச.2ல் விசாலயன்கோட்டை பட்டையா கோவிலில் சூலாயுதம், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மணி, செவரக்கோட்டையில் வில்லுகாபுலி கருப்பர் கோயிலில் 45 கிலோ எடையுள்ள 9 வெண்கல மணிகளை திருடி சென்றனர். தொடர்ந்து கோயிலில் திருட்டு நடைபெறுவது குறித்து கல்லல் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

