ADDED : பிப் 15, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் மதுரை ரோட்டில் புதுத்தெரு அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் ரூ 38 ஆயிரம் மற்றும் 2 கிலோ பூண்டு திருடப்பட்டுள்ளது.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் ஜேம்ஸ் என்பவருக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட் உள்ளது. நேற்று காலை 9:00 மணிக்கு கடையை திறந்து உள்ளே சென்ற போது கல்லாப் பெட்டியில் ரூ 38 ஆயிரம் மற்றும் விற்க வைத்திருந்த 2 கிலோ பூண்டு திருடு போனது தெரிந்தது.
கடையினுள் இருந்த கேமிரா பதிவை பார்வையிட்டதில் திருடன் இரவு 11:30 மணிக்கு கூலிங் ஷீட் கூரையை பிரித்து உள்ளே இறங்கி திருடியது தெரிந்தது. கேமிரா வயர்களை அறுத்ததும் தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

