/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
/
திருப்புத்துாரில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
ADDED : ஆக 16, 2025 11:49 PM

திருப்புத்துார்; திருப்புத்துார் திருத்தளி நாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு யோகபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
குன்றக்குடி தேவஸ் தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மேற்கு நோக்கி யோகநிலையில் அமர்ந்த நிலையில் பைரவர் எழுந்தருளியுள்ளார். இவருக்கு அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
நேற்று காலை 11:30 மணிக்கு ரமேஷ் குருக்கள், பிரதோஷ குருக்கள் உள்ளிட்ட சிவார்ச்சாரி யார்கள் பைரவ பூஜை நடத்தி மூலவருக்கு அபிேஷகம் செய்தனர். தொடர்ந்து சந்தனக் காப்பு அலங்காரத்தில் யோகபைரவர் அருள் பாலித்தார்.
தேவகோட்டை: தேவகோட்டை கைலாசநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து பைரவருக்கு வடைமாலை சாற்றப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் நடந்தன.

