/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துாரில் கிடப்பில் விடப்பட்ட திட்டங்கள் ஏராளம்; நிறைவேற்றப்படுமா என மக்கள் எதிர்பார்ப்பு
/
திருப்புத்துாரில் கிடப்பில் விடப்பட்ட திட்டங்கள் ஏராளம்; நிறைவேற்றப்படுமா என மக்கள் எதிர்பார்ப்பு
திருப்புத்துாரில் கிடப்பில் விடப்பட்ட திட்டங்கள் ஏராளம்; நிறைவேற்றப்படுமா என மக்கள் எதிர்பார்ப்பு
திருப்புத்துாரில் கிடப்பில் விடப்பட்ட திட்டங்கள் ஏராளம்; நிறைவேற்றப்படுமா என மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 26, 2025 11:55 PM

திருப்புத்துார்: திருப்புத்துாரில் கிடப்பிலுள்ள திட்டங்களை நிறைவேற்ற விரைவான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
திருப்புத்துார் வளர்ந்து வரும் நகராக உள்ளது.
இங்கு பல திட்டங்கள் நிதி அனுமதி,நிர்வாக அனுமதி பெறாமல் கிடப்பில் உள்ளன. அதில் முக்கியமான திட்டங்களை இந்த ஆண்டிற்குள் நிறைவேற்ற அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அறவிப்போடு புறவழிச்சாலை:
திருப்புத்துாரில் கடந்த முறை முதல்வர் வருகையின் போது ரூ. 50 கோடி மதிப்பில் புதிய புறவழிச்சாலை திட்டம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அதற்கான ஆய்வை மேற்கொண்டனர். திருமயம் -மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை காட்டாம்பூர் பகுதியிலிருந்து சிங்கம்புணரி சாலையில் கே.வைரவன்பட்டி வரை இணைக்க சர்வே நடந்தது. தற்போது நிதி அனுமதிக்காக காத்திருக்கிறது. விரைவாக நிதி அனுமதி அளித்து திட்டப்பணிகளை துவக்க வேண்டுமென பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் மூலம் நகரினுள் அதிகரித்துள்ள போக்குவரத்து நெருக்கடி குறையும் வாய்ப்புள்ளது.
மினி ஸ்டேடியம் மிஸ்சிங்:
திருப்புத்துாரில் நீண்ட காலமாக இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது விளையாட்டுத் திடல் . கடந்த ஆண்டில் அரசு ரூ 3 கோடி மதிப்பில் மினி ஸ்டேடியம் வசதியுடன் விளையாட்டு அரங்கம் கட்ட அறிவிப்பு வெளியானது. அதற்கான 3 ஏக்கர் இடம் சோழம்பட்டி விலக்கு ரோடு எதிரில் காரையூர் ஊராட்சியில் ஒதுக்கப்பட்டது. சிங்கம்புணரி ரோட்டை ஒட்டி உள்ளதால் போக்குவரத்து வசதி எளிதாக கிடைக்கும் இடமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் அறிவிக்கப்பட்ட காரைக்குடியில் விளையாட்டரங்கம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ள நிலையில் திருப்புத்துார் மினி ஸ்டேடியத்திற்கு நிதி அனுமதியாகாமல் கிடப்பில் உள்ளது.
துாரெடுக்காத கண்மாய்:
நகரின் எல்லைக்குள் உள்ள பெரிய கண்மாய் மாவட்டத்திற்கு ஒரு கண்மாய் திட்டத்தில் இணைக்கப்பட்டும் மேம்பாடு பணிகள் நடைபெறவில்லை. கண்மாயில் கரைகள் பலப்படுத்தி நடைபாதை அமைக்கவும், கண்மாயினுள் அனைத்து மரங்களையும் அகற்றி துார் வாரி மழைநீர் சேமிப்புக்கு மட்டும் பயன்படுத்தவும், மடைகள்,கலுங்குகளை புனரமைக்கவும், வரத்துக்கால்வாய்களை சீரமைக்கவும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கிடப்பில் நகராட்சி திட்டம்:
திருப்புத்துார் பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. தேவையான வருவாய்,மக்கள் தொகை இருந்தும், அதற்கான கோப்பு பல முறை அனுப்பப்பட்டும் பரிசீலனையில் உள்ளது. பெரிய நகருக்கான திட்டமிடல் இல்லாமல் நகரின் அடிப்படை வசதி நிறைவேற்றப்படுகிறது. தினசரி மார்க்கெட், ஒருங்கிணைக்கப்பட்ட கழிவுநீர் வடிகால் மற்றும் சுத்திகரிப்பு, விரிவான உரக்கிடங்கு, பகுதி வாரியான பூங்கா, நுாலகங்கள்... என்று பல வசதிகளை உருவாக்க முடியவில்லை. திட்டமிட்ட வளர்ச்சியை பெற திருப்புத்துாரை நகராட்சியாக தரம் உயர்த்த எதிர்பார்க்கின்றனர்.

