/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை புறவழிச்சாலை சந்திப்புகளில் மின்விளக்கு இல்லை; விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
சிவகங்கை புறவழிச்சாலை சந்திப்புகளில் மின்விளக்கு இல்லை; விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சிவகங்கை புறவழிச்சாலை சந்திப்புகளில் மின்விளக்கு இல்லை; விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சிவகங்கை புறவழிச்சாலை சந்திப்புகளில் மின்விளக்கு இல்லை; விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூலை 30, 2025 10:03 PM
சிவகங்கை; சிவகங்கை புறவழிச்சாலை சந்திப்புகளில் இரவில் மின் விளக்குகள் இல்லாததால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை நகருக்குள் போக்குவரத்தை குறைக்க நெடுஞ்சாலை துறை சார்பில் புறவழிச் சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலை பணி முதற்கட்டமாக காஞ்சிரங்காலில் திருப்புத்துார் நெடுஞ்சாலையில் இருந்து கல்குளம் அருகே இளையான்குடி நெடுஞ்சாலை வரை 7.6 கி.மீ., துாரத்திற்கு ரூ.77.16 கோடியில் அமைக்கப்படுகிறது. பணிகள் 2023 நவம்பரில் தொடங்கி நடந்து வருகிறது. புறவழிச்சாலை முழுவதும் பயன்பாட்டுக்கு வராவிட்டாலும் வந்தவாசி சாலையில் இருந்து தொண்டி சாலை வரை மட்டும் உள்ள புறவழிச் சாலையை வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.
தொண்டி சாலையில் வேலுநாச்சியார் மணி மண்டபம் அருகேஉள்ள சந்திப்பில் இருந்து பனங்காடி ரோடு சந்திப்பு, வந்தவாசி ரோடு சந்திப்பு, ஏனாபுரம் ரோடு சந்திப்புகளில் மின் விளக்கு இல்லை.
இரவு நேரத்தில் நகரில் இருந்து அல்லுார் பனங்காடி, வந்தவாசி, ஆயுதப்படை குடியிருப்பு, போக்குவரத்து நகர் செல்லும் மக்கள் புறவழிச்சாலையை பயன்படுத்தி தான் செல்கின்றனர். இரவு நேரத்தில் போதிய மின்விளக்குகள் இல்லாததால் டூவீலரில் செல்வோர்கள் புறவழிச்சாலையில் திரும்பும் போது எதிரே வரும் வாகனங்களில் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. கடந்த வாரம் ஒருவர் விபத்தில் சிக்கினார்.
நகரில் இருந்து பணி முடித்து புறவழிச்சாலையை பயன்படுத்தி டூவீலரில் இரவு நேரத்தில் இந்த பகுதிக்கு செல்லும் பெண்கள் அச்சப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் போதிய மின் விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.