/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தெற்கு கீரனுாரில் பம்ப் செட்களுக்கு 2 மாதமாக மின்சப்ளை இல்லை கருகும் பருத்தி, மிளகாய் செடிகள்

ADDED : ஜன 26, 2025 06:50 AM
இளையான்குடி : இளையான்குடி அருகே உள்ள தெற்கு கீரனுாரில் பம்ப்செட்டுகளுக்கு மின்சப்ளை கடந்த 2 மாதங்களாக இல்லாத காரணத்தினால் பருத்தி மற்றும் மிளகாய் செடிகள் கருகி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இளையான்குடி அருகே உள்ள தெற்கு கீரனுார் கிராமத்தில் 25க்கும் மேற்பட்ட பம்ப்செட்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் பருத்தி, மிளகாய் விவசாயம் செய்து வருகின்றனர்.
தெற்கு கீரனுாரில் இருந்து அரியாண்டிபுரம் செல்லும் வழியில் உள்ள பம்ப்செட்களுக்கு கடந்த 2 மாத காலமாக மின் விநியோகம் இல்லாத காரணத்தினால் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் மேற்கண்ட பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.
விவசாய சங்க நிர்வாகி தங்கபாண்டியன் கூறுகையில், தெற்குகீரனுாரில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து 25க்கும் மேற்பட்ட பம்ப்செட்டுகளுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் கிழக்குப் பகுதியில் உள்ள பம்ப்செட்டுகளுக்கு மின்விநியோகம் வழங்கி வரும் நிலையில் மேற்கு பகுதியில் உள்ள பம்ப்செட்களுக்கு கடந்த 2 மாத காலமாக மின்சப்ளை இல்லாதது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
50 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி,மிளகாய் செடிகள் கருகி வருகின்றன. மின்வாரிய அதிகாரிகள் விவசாயிகளின் நலன் கருதி உடனடியாக மின் சப்ளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.