/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி, மானாமதுரையில் களை எடுக்க ஆட்கள் தட்டுப்பாடு
/
இளையான்குடி, மானாமதுரையில் களை எடுக்க ஆட்கள் தட்டுப்பாடு
இளையான்குடி, மானாமதுரையில் களை எடுக்க ஆட்கள் தட்டுப்பாடு
இளையான்குடி, மானாமதுரையில் களை எடுக்க ஆட்கள் தட்டுப்பாடு
ADDED : அக் 19, 2025 06:06 AM

இளையான்குடி: இளையான்குடி,மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் இருந்த விவசாய தொழிலாளர்கள் நகரங்களுக்கு குடி பெயர்ந்ததால் வயல்களில் களை எடுக்க ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் சிரமப்படுகின்றனர்.
இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 55 ஊராட்சிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கிராமங்களிலும்,மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 39 ஊராட்சிகளை சேர்ந்த 250 மேற்பட்ட கிராமங்களிலும் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் முதல் இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதையடுத்து விவசாயிகள் விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நெல் நன்றாக முளைத்து வளர்ந்து வரும் நிலையில் அதனை விட களைச்செடிகளும் அதிகளவில் வளர்ந்துள்ளதால் அதனை அகற்றுவதற்கு போதிய விவசாய தொழிலாளர்கள் கிடைக்காமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: கடந்த மாதமே மானாவாரியாக நெல் விதைகளை துாவிய நிலையில் போதிய மழை இல்லாததால் நெல் விதைகள் முளைக்காமல் இருந்தது.
கடந்த வாரம் முதல் மழை பெய்து வருவதால் தற்போது நெல் விதைகள் முளைத்து வருகின்ற நிலையில் களைச்செடிகளும் அதிகளவில் வளர்ந்துள்ளன.
இதனை அகற்றுவதற்கும், களைக்கொல்லி மருந்து தெளிப்பதற்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறையாக உள்ளது. விவசாய தொழிலாளர்கள் சென்னை, மதுரை, கோவை,ஈரோடு,திருப்பூர் போன்ற நகரங்களுக்கு குடி பெயர்ந்ததால் இனி வரும் காலங்களில் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை உள்ளதாக தெரிவித்தனர்.