ADDED : ஏப் 11, 2025 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட புது பஸ் ஸ்டாண்டில் இருந்து மதுரை, திருச்சி, சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், அருப்புக்கோட்டை, விருதுநகர், திருச்செந்துார், தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமேஸ்வரம், சிவகங்கை, இளையான்குடி, பரமக்குடி, திருப்புவனம், தாயமங்கலம், காளையார்கோயில், நரிக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன.
4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் தினந்தோறும் பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்கின்றனர். இங்கு ஏ.டி.எம்., வசதி இல்லாத காரணத்தால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.
வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் இங்கிருந்து வேறு ஊருக்கு பஸ்களில் செல்லும்போது பணம் தேவை படும் போது ஏ.டி.எம்., வசதி இல்லாததால் நீண்ட தூரம் சென்று பணம் எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

