/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோயில் வளாகத்தில் குடிநீர் இல்லை
/
கோயில் வளாகத்தில் குடிநீர் இல்லை
ADDED : அக் 11, 2024 05:15 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் கோயில் வளாகத்தில் குடிநீர் வசதி செய்து தரப்படாததால் பக்தர்கள் தவிக்கின்றனர்.
இங்குள்ள சேவுகப்பெருமாள் ஐயனார் கோயிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயில் வளாகத்தில் குடிநீர் வசதி செய்யாததால் பக்தர்கள் தண்ணீரை தேடி அலைகின்றனர். அருகே கடைகள் இருந்தாலும் செலவுக்கு பணம் கொண்டு வராதவர்கள் தண்ணீரைத் தேடி அலைய வேண்டியுள்ளது.
வேறு வழி இல்லாமல் சிலர் குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரை குடித்துச் செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே கோயில் உள்ளேயும் வெளியேயும் தண்ணீர் சுத்திகரிக்கும் குடிநீர் இயந்திரத்தை நிறுவி, அனைத்து பக்தர்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

