/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
நான்கு வழிச்சாலையில் விபத்து உயர்கோபுர விளக்கு இல்லை
/
நான்கு வழிச்சாலையில் விபத்து உயர்கோபுர விளக்கு இல்லை
நான்கு வழிச்சாலையில் விபத்து உயர்கோபுர விளக்கு இல்லை
நான்கு வழிச்சாலையில் விபத்து உயர்கோபுர விளக்கு இல்லை
ADDED : செப் 28, 2024 05:59 AM
திருப்புவனம் : மதுரை- - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் தொடர் விபத்து நடந்து வரும் சக்குடி விலக்கு, மணலுார் பஸ் ஸ்டாப், பிரமனுார் விலக்கு, டி.பாப்பான்குளம் உள்ளிட்ட இடங்களில் உயர் மின் கோபுர விளக்குகள் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரையில் இருந்து பரமக்குடி வரையில் நான்கு வழிச்சாலையும் அதன்பின் ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலை வரை தலா பத்து மீட்டர் அகலம் கொண்ட இருவழிச்சாலையும் அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து நடந்து வருகிறது. நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பின் இப்பாதையில் வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது.
நான்கு வழிச்சாலையில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் உயர்மின் கோபுர விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் மணலுார், சக்குடி விலக்கு, பிரமனுார் விலக்கு, டி.பாப்பான்குளம் உள்ளிட்ட இடங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன. தொலை தூரத்தில் இருந்து அதிவேகத்தில் வரும் வாகனங்கள் சாலையை கடப்பவர்கள் பற்றி சரியாக தெரியாததால் மோதி விபத்து ஏற்பட்டு அடிக்கடி உயிரிழப்புகள் நிகழ்கின்றன. மணலுாரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பலரும் மதுரைக்கு தினசரி கூலி வேலைக்கு சென்று வருகின்றனர்.இரவில் சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
எனவே இதனை தடுக்க அடிக்கடி விபத்துகள் நடைபெறும் இடங்களை ஆய்வு செய்து உயர் மின்கோபுர விளக்குகள் பொருத்த வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.