/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்ய ஊழியர் இல்லை
/
பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்ய ஊழியர் இல்லை
ADDED : நவ 21, 2025 04:44 AM
மானாமதுரை: மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி யில் 1920 மாணவிகள் படிக்கின்றனர். பள்ளி யிலுள்ள கழிப்பறையை சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர் வராததால் துர்நாற்றமெடுப்பதால் மாணவிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த 1920 மாணவிகள் படித்து வருகின்றனர்.
மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய வகுப்பறை மற்றும் கழிப்பறை இல்லாத சூழ்நிலையில் ஏற்கெனவே மாணவிகள் அவதிப்பட்டு வருகிற நிலையில் கடந்த ஒரு வாரமாக மானாமதுரை நக ராட்சியில் இருந்து துப்புரவு பணியாளர்கள் முறையாக வராததால் கழிப்பறை சுத்தம் செய்யப்படவில்லை.
துர்நாற்றம் எடுக்கும் கழிப்பறையையே மாணவிகள் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். பள்ளி மேலாண்மை குழு நிர் வாகிகள், பெற்றோர்கள் கூறியதாவது:
மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கு மானாமதுரை நகராட்சியில் இருந்து தினந்தோறும் துப்புரவு பணியாளர் ஒருவர் வந்து கழிப்பறைகளை சுத்தம் செய்து வந்தார். கடந்த ஒரு வாரமாக நகராட்சியில் போதிய பணியாளர்கள் இல்லை என காரணம் கூறி அவரும் சரிவர வராததால் கழிப்பறை சுத்தம் செய்யப்படாமல் நாற்றமெடுத்து வருகிறது.
ஏற்கனவே இப்பள்ளியில் மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய கழிப்பறை இல்லாத நிலையில் பெரும்பாலான மாணவிகள் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் பள்ளி முடிந்த பிறகு வீட்டிற்கு சென்று கழிப்பறையை பயன்படுத்துகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பள்ளிக்கு நிரந்தரமாக துப்புரவு பணியாளர்களை நியமன செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
நகராட்சி கமிஷனர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
நகராட்சியாக மாற்றம் செய்யப்பட்ட பிறகு உரிய அனுமதியின்றி துப்புரவு பணியாளர்கள் பள்ளிக்கு சென்று வந்ததால் நிறுத்தப் பட்டது. தற்போது பள்ளி யிலிருந்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர் வாகத்தினர் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து இன்று முதல் துப்புரவு பணியாளர் பள்ளிக்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

