/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் ஆண்கள் அரசு பள்ளி இல்லை; கனவாகும் உயர் கல்வியால் பெற்றோர் கவலை
/
மானாமதுரையில் ஆண்கள் அரசு பள்ளி இல்லை; கனவாகும் உயர் கல்வியால் பெற்றோர் கவலை
மானாமதுரையில் ஆண்கள் அரசு பள்ளி இல்லை; கனவாகும் உயர் கல்வியால் பெற்றோர் கவலை
மானாமதுரையில் ஆண்கள் அரசு பள்ளி இல்லை; கனவாகும் உயர் கல்வியால் பெற்றோர் கவலை
ADDED : டிச 25, 2024 08:19 AM

மானாமதுரை : மானாமதுரையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லாத காரணத்தினால் மாணவர்களின் உயர்கல்வி கனவு கேள்விக்குறியாக உள்ளதால் மாணவர்கள் கவலையில் உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர்.
இந்நிலையில் மானாமதுரையில் மகளிர்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளி உள்ள நிலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லாத காரணத்தினால் இப்பகுதியில் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மேல்நிலைப் படிப்பு படிக்க அரசு பள்ளி இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
காங்., நிர்வாகி பால் நல்லதுரை கூறியதாவது: மானாமதுரையை சுற்றி 150 க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராமப்புற மாணவர்கள் படிப்பிற்காக மானாமதுரை வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மானா மதுரையில் ஆண்களுக்கான அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாத நிலையில் 10ம் வகுப்பு வரை மானாமதுரை பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதற்காக மானாமதுரையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடைக்காட்டூருக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது.
7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி மருத்துவம் படிக்கும் கனவில் உள்ள மாணவர்கள் 20 கிலோ மீட்டர் தூரம் சென்று படிப்பதால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
ஆகவே தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி மானாமதுரையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

