/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு மருத்துவக்கல்லுாரிகளில் டிப்ளமோ மாணவர்களுக்கு விடுதி வசதியில்லை * சுகாதாரத்துறை செயலரிடம் டீன்கள் புகார்
/
அரசு மருத்துவக்கல்லுாரிகளில் டிப்ளமோ மாணவர்களுக்கு விடுதி வசதியில்லை * சுகாதாரத்துறை செயலரிடம் டீன்கள் புகார்
அரசு மருத்துவக்கல்லுாரிகளில் டிப்ளமோ மாணவர்களுக்கு விடுதி வசதியில்லை * சுகாதாரத்துறை செயலரிடம் டீன்கள் புகார்
அரசு மருத்துவக்கல்லுாரிகளில் டிப்ளமோ மாணவர்களுக்கு விடுதி வசதியில்லை * சுகாதாரத்துறை செயலரிடம் டீன்கள் புகார்
ADDED : மே 02, 2025 01:48 AM
சிவகங்கை:அரசு மருத்துவக் கல்லுாரிகளில் பாரா மெடிக்கல் கோர்ஸ் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விடுதிகள் வசதியின்றி மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை செயலரிடம் டீன்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 34 அரசு மருத்துவக் கல்லுாரிகள் இயங்குகின்றன. இதில் 2022 ல் துவக்கிய 11 மருத்துவக்கல்லுாரிகள் தவிர்த்து, மற்ற 23 கல்லுாரிகளிலும் எம்.பி.பி.எஸ்., எம்.டி., சேர்க்கையுடன் டிப்ளமோ ரேடியாலஜிஸ்ட், மயக்கவியல், லேப் டெக்னீசியன், தியேட்டர் அசிஸ்டெண்ட் படிப்புகளுக்கு குறைந்தது கல்லுாரிக்கு 10 மாணவர் முதல் அதிகபட்சம் 100 மாணவர்கள் வரை சேர்க்கை நடக்கிறது.
ஒவ்வொரு மருத்துவ கல்லுாரியிலும் பாரா மெடிக்கல் கோர்ஸ்களில் மட்டுமே 500 மாணவர்கள் படிக்கின்றனர். அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் எம்.பி.பி.எஸ்., முதுகலை மருத்துவம், பி.எஸ்சி., நர்சிங் மாணவர்களுக்கு மட்டுமே விடுதி வசதி உள்ளது. ஆனால் பாரா மெடிக்கல் கோர்ஸ்களில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்லுாரி வளாகத்தில் விடுதிகள் வசதி இல்லை. இதனால், பிளஸ் 2 முடித்து டிப்ளமோ, பாரா மெடிக்கல் கோர்ஸ்களில் சேரும் மாணவ, மாணவிகள் கல்லுாரிக்கு அருகே வாடகை வீடுகளில் தங்கி படிக்கும் கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர். மாணவிகளை வெளியில் தங்கி படிக்க வைக்க விரும்பாத பெற்றோர்கள் சேர்க்கைக்கு முன்வருவதில்லை. இதனால் டிப்ளமோ, லேப் டெக்னீசியன் பாடப்பிரிவுகளில் 100 மாணவர்களுக்கு பதில் 50 முதல் 60 பேர் தான் சேருவதாக புகார் எழுந்துள்ளது.
* விடுதிக்கு ஏற்பாடு செய்ய உத்தரவு:
அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் ஒருவர் கூறியதாவது: சில நாட்களுக்கு முன் ‛வீடியோ கான்பிரன்சிங்'கில் சுகாதாரத்துறை செயலர் ஆலோசனை நடத்தினார். பெரும்பாலான டீன்கள் விடுதி இல்லாததால் பாரா மெடிக்கல் கோர்ஸ்களில் மாணவர் சேர்க்கை சரிவில் இருப்பதாக தெரிவித்தனர். குறுக்கிட்ட செயலர் அரசு மருத்துவக்கல்லுாரிக்கு சொந்தமான பழைய அரசு மருத்துவமனை கட்டடங்களை சீரமைத்து ‛பாரா மெடிக்கல் கோர்ஸ்' மாணவ, மாணவிகளுக்கு விடுதிகள் வசதியை ஏற்படுத்தலாம் என ஆலோசனை வழங்கினார் என்றார்.
100 சீட்டுக்கு மேல் இல்லாத கல்லுாரி
தமிழகத்தில் பழைய அரசு மருத்துவக் கல்லுாரிகள், புதிதாக 2022 ல் துவக்கிய 11 அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை ஆண்டுக்கு 150 ஆக உள்ளது. 2012 ல் துவங்கிய சிவகங்கை, திருவாரூர் மருத்துவக்கல்லுாரிகளில் மட்டுமே தற்போதும் எம்.பி.பி.எஸ்., சேர்க்கை 100 சீட்டுகளாக உள்ளன. இங்கும் மாணவர்கள் சேர்க்கையை 150 ஆக அதிகரிக்க வேண்டும் எனவும் டீன் தெரிவித்தனர்.

