/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மயானத்திற்கு பாதை இல்லை தண்ணீரில் இறங்கி இறுதி சடங்கு
/
மயானத்திற்கு பாதை இல்லை தண்ணீரில் இறங்கி இறுதி சடங்கு
மயானத்திற்கு பாதை இல்லை தண்ணீரில் இறங்கி இறுதி சடங்கு
மயானத்திற்கு பாதை இல்லை தண்ணீரில் இறங்கி இறுதி சடங்கு
ADDED : டிச 31, 2025 05:34 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மாவட்ட எல்லை கிராமத்தில் உள்ள மயானத்திற்கு பாதை வசதி இல்லாததால் ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி இறந்தவர் உடலை கொண்டு சென்றனர்.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட குமரபட்டி கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமத்திற்கான மயானம் சிவகங்கை மாவட்டம் மேலப்பட்டி ஊராட்சி பாலாற்றங் கரையில் அமைந்துள்ளது.
இந்த மயானத்திற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லாமல் மக்கள் தவிக்கின்றனர். இங்குள்ள தடுப்பணை அருகே ஆண்டு முழுவதும் தண்ணீர் தேங்கி கிடப்பதால் கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை இடுப்பளவு தண்ணீரில் நனைந்து கொண்டே துாக்கி செல்கின்றனர்.
மழைக்காலங்களில் கழுத்தளவு தண்ணீரில் கயிறு கட்டி இழுத்துச் சென்று அடக்கம் செய்ய வேண்டி உள்ளது. கிராம மயானத்திற்கு முறையான பாதை வசதி செய்து தர மதுரை, சிவகங்கை மாவட்ட நிர்வாகங்களை பலமுறை அணுகியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
நேற்று இக்கிராமத்தில் இறந்தவர் ஒருவரது உடலை இடுப்பளவு தண்ணீரில் சிரமப்பட்டு துாக்கிச் சென்று அடக்கம் செய்துள்ளனர்.

