/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மொச்சியனேந்தலில் மயானத்திற்கு சாலை வசதி இல்லை; வயல் வழியாக துாக்கிச் செல்லும் அவலம்

ADDED : நவ 23, 2024 06:31 AM

இளையான்குடி; இளையான்குடி அருகே மொச்சியனேந்தல் கிராமத்தில் மயானத்திற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் சேரும்,சகதியுமான வயல் வழியாக உடல்களை துாக்கிச் செல்லும் அவல நிலை நீடிக்கிறது.
இளையான்குடி அருகேயுள்ள வாணி ஊராட்சிக்குட்பட்ட மொச்சியனேந்தல் கிராமத்தில் ஆதிதிராவிட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து மயானத்திற்கு செல்லும் 2கி.மீ., துாரமுள்ள நிலையில் இப்பாதையில் ரோடு வசதி இல்லாத காரணத்தினால் இறந்தவர்களின் உடல்களை சேறும், சகதியுமாக உள்ள வயல் மற்றும் முட்செடிகள் வளர்ந்த பகுதி வழியாக சிரமப்பட்டு கொண்டு செல்லும் அவல நிலை நீடித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
நீண்ட காலமாக சிரமப்பட்டு வருவதாக அதிகாரிகளிடம் மக்கள் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது மழைக்காலம் என்பதால் வயல்களில் விவசாயம் செய்து வருவதால் உடல்களை சிரமப்பட்டு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
மாவட்ட நிர்வாகம் மயானத்திற்கு ரோடு வசதி அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.