/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கையில் வாடகை கட்டடத்தில் கண்காணிப்பாளர், தபால் அலுவலகம் ஏ.டி.எம்., இயந்திரம் கூட இல்லை
/
சிவகங்கையில் வாடகை கட்டடத்தில் கண்காணிப்பாளர், தபால் அலுவலகம் ஏ.டி.எம்., இயந்திரம் கூட இல்லை
சிவகங்கையில் வாடகை கட்டடத்தில் கண்காணிப்பாளர், தபால் அலுவலகம் ஏ.டி.எம்., இயந்திரம் கூட இல்லை
சிவகங்கையில் வாடகை கட்டடத்தில் கண்காணிப்பாளர், தபால் அலுவலகம் ஏ.டி.எம்., இயந்திரம் கூட இல்லை
ADDED : ஜூன் 12, 2025 10:57 PM
சிவகங்கை; சிவகங்கையில் மாவட்ட தபால் கண்காணிப்பாளர், தலைமை தபால் நிலையங்களுக்கு சொந்த கட்டடம் இன்றி, வாடகை கட்டடத்திற்காக அதிகாரிகள் அலைகின்றனர்.
சிவகங்கை முத்துச்சாமி நகரில் வாடகை கட்டடத்தில், மாவட்ட தபால் கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளது. இதன் கீழ் சிவகங்கை, மானாமதுரையில் இரு தலைமை தபால் நிலையம், 100 க்கும் மேற்பட்ட கிளை தபால் நிலையங்கள் செயல்படுகின்றன.
சிவகங்கை தலைமை தபால் நிலையங்கள் மூலம் வங்கி கணக்கு துவக்குதல், ஆர்.டி., பணம் செலுத்துதல் உள்ளிட்ட சேமிப்பு திட்டங்கள், தங்க நாணயம் விற்பனை, பதிவு தபால், இன்சூரன்ஸ் உட்பட தேசிய வங்கிகள் சார்ந்த அனைத்து பணிகளும் தபால் அலுவலகத்தில் நடைபெறுகிறது. ஆனால், மாவட்ட தலைநகரில் உள்ள தபால் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் தலைமை தபால் நிலையத்திற்கு சொந்தமாக கட்டடம் இன்றி, வாடகை கட்டடத்தில் தான் இயங்கி வருகிறது.
ஒவ்வொரு இடத்திற்கும் தபால் கண்காணிப்பாளர் அலுவலகங்களை மாற்றி வருகின்றனர். தற்போது, தபால் கண்காணிப்பாளர், உதவி கண்காணிப்பாளர், தலைமை தபால் நிலையம் அனைத்தையும் ஒரே கட்டடத்திற்குள் கொண்டு வரும் நோக்கில், வாடகை கட்டடத்தை தபால் துறை உயர் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
இதனால், தொடர்ந்து சிவகங்கையில் வாடகை கட்டடத்திலேயே கண்காணிப்பாளர், தலைமை தபால் அலுவலகம் இயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
கட்டடம் இல்லாததால், தபால் வங்கி கணக்கு துவக்குவோருக்கு பணம் எடுக்க 'ஏ.டி.எம்.,' கார்டு வழங்குகின்றனர். ஆனால், அவர்களுக்கான ஏ.டி.எம்., மையம் சொந்த கட்டடத்தில் மட்டுமே வைக்க வேண்டும் என்ற விதி இருப்பதால், சிவகங்கை தலைமை தபால் நிலையத்தில் ஏ.டி.எம்., மையம் கூட பொருத்தவில்லை. சிவகங்கையில் சொந்த இடம் ஏற்படுத்தி, அங்கு கண்காணிப்பாளர், தலைமை தபால் நிலையத்திற்கான கட்டடம் கட்ட தபால் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.