/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோட்டையூரில் குடிநீர் சப்ளை இல்லை விலை கொடுத்து வாங்கும் அவலம்
/
கோட்டையூரில் குடிநீர் சப்ளை இல்லை விலை கொடுத்து வாங்கும் அவலம்
கோட்டையூரில் குடிநீர் சப்ளை இல்லை விலை கொடுத்து வாங்கும் அவலம்
கோட்டையூரில் குடிநீர் சப்ளை இல்லை விலை கொடுத்து வாங்கும் அவலம்
ADDED : டிச 26, 2024 04:57 AM

இளையான்குடி: இளையான்குடி அருகேயுள்ள கோட்டையூர்,சிறுபாலையில் காவிரி கூட்டு குடிநீர் 15 நாட்களுக்கும் மேலாக வராததால் கிராம மக்கள் குடிநீருக்கு சிரமப்படுகின்றனர்.
இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 150க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளுக்கும்,இளையான்குடி பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் உள்ள வீடுகளுக்கும் திருச்சியில் இருந்து ராமநாதபுரம் வரை செல்லும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது ஒவ்வொரு பகுதிகளுக்கும் 5,10,15,30 நாட்கள் என பிரிக்கப்பட்டு ஒருமுறை குடிநீர் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது கடந்த சில வருடங்களாக போதிய பராமரிப்பு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் சரிவு போன்ற காரணத்தால் ஒவ்வொரு பகுதிகளிலும் 30 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது.
கோட்டையூர்,சிறுபாலை கிராம மக்கள் கூறியதாவது: காவிரி கூட்டு குடிநீர் குழாய் அடிக்கடி சேதமடைவதால் குடிநீர் வினியோகம் தடைபட்டு வருகிறது. அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாகனங்களில் வரும் குடிநீரை ஒரு குடம் ரூ.15 கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் கூடுதல் செலவு ஏற்பட்டு வருகிறது என்றனர்.

