/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அவலம் பன்றிகளின் வாழ்விடமாக மாறிய கண்மாய் துார்வாரப்படாததால் தண்ணீர் தேக்கம் இல்லை
/
அவலம் பன்றிகளின் வாழ்விடமாக மாறிய கண்மாய் துார்வாரப்படாததால் தண்ணீர் தேக்கம் இல்லை
அவலம் பன்றிகளின் வாழ்விடமாக மாறிய கண்மாய் துார்வாரப்படாததால் தண்ணீர் தேக்கம் இல்லை
அவலம் பன்றிகளின் வாழ்விடமாக மாறிய கண்மாய் துார்வாரப்படாததால் தண்ணீர் தேக்கம் இல்லை
ADDED : நவ 19, 2024 05:29 AM

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி அருகே பிச்சைப்பிள்ளையேந்தல் கண்மாய் துார் வாரப்படாததால் பன்றிகளின் வாழ்விடமாக மாறி வருகிறது.
திருப்புவனம் வட்டாரத்தில் பெரும்பாலான கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து நீர் வரத்து கால்வாய்கள் உள்ளன. இதில் 75 ஏக்கர் பரப்பளவுள்ள பிச்சைப்பிள்ளையேந்தல் கண்மாயும் ஒன்று. இக்கண்மாயை நம்பி 150 ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை, கரும்பு, பருத்தி, மிளகாய் உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வந்தன. மாரநாடு கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாயில் இருந்து பிச்சைப்பிள்ளையேந்தல் கண்மாய்க்கு நீர் வரத்து கால்வாய் உள்ளது.
இக்கால்வாயை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக துார்வாரவே இல்லை. இதனால் கால்வாய், கண்மாய் மேடாகி விட்டது. மாரநாடு கால்வாய் பள்ளமாகி விட்டது. வைகை ஆற்றில் இருந்து மாரநாடு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படும் போது பிச்சைப்பிள்ளையேந்தல் கண்மாய்க்கும் தண்ணீர் திறக்கப்பட வேண்டும், கால்வாய் உயரமாக இருப்பதால் தண்ணீர் வருவதே இல்லை.
பிச்சைப்பிள்ளையேந்தல் ஜெயராமன் கூறுகையில் :
கண்மாய் துார் வாரப்படவே இல்லை. மாரநாடு கால்வாய் பள்ளமாகவும் எங்கள் ஊர் கால்வாய் மேடாகவும் இருப்பதால் தண்ணீர் வருவதே இல்லை. கண்மாயில் மணல் திருட்டு காரணமாக பல இடங்களில் பள்ளங்கள் உருவாகி உள்ளது. கண்மாய் முழுவதும் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன. இரவு நேரங்களில் பன்றிகள் பிச்சைப்பிள்ளையேந்தல், தாழிகுளம், மாரநாடு, தஞ்சாக்ககூர் உள்ளிட்ட பகுதி விவசாய நிலங்களில் புகுந்து விவசாயத்தை அழித்து வருகிறது. பிச்சைப்பிள்ளையேந்தல் கண்மாயை துார் வாரி வைகை ஆற்றுத்தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை, என்றார்.