/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கழிவு நீர் செல்ல வழியில்லை; வீடுகளுக்குள் வரும் அவலம்: திருப்புவனம் பேரூராட்சியில் புகார்
/
கழிவு நீர் செல்ல வழியில்லை; வீடுகளுக்குள் வரும் அவலம்: திருப்புவனம் பேரூராட்சியில் புகார்
கழிவு நீர் செல்ல வழியில்லை; வீடுகளுக்குள் வரும் அவலம்: திருப்புவனம் பேரூராட்சியில் புகார்
கழிவு நீர் செல்ல வழியில்லை; வீடுகளுக்குள் வரும் அவலம்: திருப்புவனம் பேரூராட்சியில் புகார்
ADDED : ஆக 22, 2025 10:19 PM
திருப்புவனம் : திருப்புவனம் புதுாரில் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேற முடியாமல் மீண்டும் வீடுகளுக்குள் வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்புவனம் வைகை ஆற்றை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் வைகை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. பல ஆண்டுகளாக கழிவு நீர் வைகை ஆற்றில் விடப்படும் வகையிலேயே பேரூராட்சி நிர்வாகமும் வடிகால் அமைத்துள்ளனர். திருப்புவனம் புதுார் வைகை ஆற்றினுள் கானுார், பழையனுார் கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு செல்ல வசதியாக தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.
தடுப்பணைக்கு தண்ணீர் வர வசதியாக வைகை ஆற்றின் இருபுறமும் கரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் தேரடி வீதியில் இருந்து புதுார் வரை வைகை ஆற்றில் கழிவு நீர் செல்ல முடியவில்லை. சாக்கடை வடிகால் அடைபட்டதால் தண்ணீர் மீண்டும் வீடுகளுக்குள்ளும், தெருக்களிலும் தேங்கி கொசுக்கள், ஈக்கள் உற்பத்தியாகி சுகாதார கேடு நிலவி வருகிறது. பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தி.புதுார் 6 வது வார்டு ஆண்டாள் நகர் பொதுமக்கள் கூறுகையில் : தடுப்பணை கட்டுமான பணிகள் ஒரு வருடமாக நடந்து வருகிறது. ஐகோர்ட் வைகை ஆற்றில் கழிவு நீர் விடுவதை உள்ளாட்சி அமைப்புகள் தவிர்க்க வேண்டும், கழிவு நீரை சுத்திகரிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டது. இன்று வரை உள்ளாட்சி அமைப்புகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஒரு மாதமாக கழிவு நீர் செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே திரும்ப வருகிறது. இதனால் வீடுகளுக்குள் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு நிலவி வருகிறது என்றனர்.