/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பாம்பு பிடிக்கவே நேரம் போதவில்லை
/
பாம்பு பிடிக்கவே நேரம் போதவில்லை
ADDED : டிச 30, 2024 07:23 AM

சிங்கம்புணரி,: சிங்கம்புணரி தாலுகாவில் வீடுகளுக்குள் பாம்புகள் புகுவது அதிகரித்து வரும் நிலையில் எஸ்.புதூரில் தனியாக தீயணைப்பு நிலையம் அமைக்க வலியுறுத்துகின்றனர்.
இத்தாலுகாவில் சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியங்களில் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ள நிலையில் சிங்கம்புணரியில் தீயணைப்பு நிலையம் இயங்கி வருகிறது.
இப்பகுதியில் வீடுகளுக்குள் புகும் பாம்புகளை பிடிக்க தீயணைப்புத் துறையினருக்கு அதிக அளவில் அழைப்புகள் வருகிறது. தவிர கிணறுகளில் விழும் மாடுகளை மீட்கவும் மலைகளில் விபத்துகளில் காயமடைந்தவர்களை மீட்கவும் வீரர்கள் செல்ல வேண்டியுள்ளது.
பெரிய தாலுகாவாக இருப்பதால் ஒரு சம்பவத்திற்கு செல்லும்போது பல மணி நேரம் ஆகிறது.
இதனால் மற்ற அழைப்புகளுக்கு செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. எஸ்.புதூர் ஒன்றியத்தில் தனியாக தீயணைப்பு நிலையம் இல்லை. இப்பகுதியில் மீட்பு மற்றும் அவசர தேவைகளுக்கு சிங்கம்புணரி உள்ளிட்ட தூரத்துப் பகுதிகளில் இருந்து தான் தீயணைப்பு வாகனம் செல்ல வேண்டியுள்ளது.
இவ்வொன்றிய கிணற்றில் அடிக்கடி மாடுகள், பொதுமக்கள் விழும் சம்பவங்கள் நடக்கிறது. ஆனால் தீயணைப்பு வண்டி வருவதற்கு காலதாமதம் ஆவதால் பாதிப்புகள் ஏற்படுகிறது.
எனவே எஸ்.புதூர் ஒன்றியத்திற்கு தனியாக தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.