/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பள்ளி சமையலறையை உடைத்து முட்டை அவித்து சாப்பிட்ட திருடர்கள்
/
பள்ளி சமையலறையை உடைத்து முட்டை அவித்து சாப்பிட்ட திருடர்கள்
பள்ளி சமையலறையை உடைத்து முட்டை அவித்து சாப்பிட்ட திருடர்கள்
பள்ளி சமையலறையை உடைத்து முட்டை அவித்து சாப்பிட்ட திருடர்கள்
ADDED : டிச 12, 2025 04:33 AM

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சமையல் கூடத்தை உடைத்து முட்டை அவித்து சாப்பிட்டு பொருட்களை, பொறுமையாக திருடிச் சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கல்லல் அருகேயுள்ள ஆலங்குடி ஊராட்சி மேலமாகாணத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
நேற்று காலை பள்ளியை திறந்த போது வகுப்பறை மற்றும் சமையலறையில் பொருட்கள் சிதறி கிடந்தன. அறையில் இருந்த டேபிள், ஜன்னல் உடைக்கப்பட்டிருந்தது. சமையல் அறையில், சத்துணவு முட்டைகளை, காஸ் அடுப்பில் அவித்து சாப்பிட்ட திருடர்கள் கணினி பொருட்களை திருடிச் சென்றிருந்தனர்.
பள்ளி ஆசிரியர்கள் புகாரில் போலீசார் விசாரிக்கின்றனர்.