ADDED : ஜூன் 12, 2025 10:53 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் வைகாசியில் மூலம் நட்சத்திரத்தன்று திருஞானசம்பந்தர் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம்.
நேற்று வைகாசி மாத மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு அதிகாலை நால்வர் சன்னதியில் உள்ள திருஞானசம்பந்தருக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு அபிஷேக,ஆராதனை பூஜை நடைபெற்றது. பக்தர்களுக்கு ஞானப்பால் வழங்கப்பட்டது. மாறநாயனார் அடியார் திருக்கூட்டத்தின் சார்பில் ஞானசம்பந்தர் நற்றமிழ் என்னும் தலைப்பில் திருமுறை பாராயணங்கள் நடைபெற்றது.