/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரையாண்டு தேர்வு காலத்தில் மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி
/
அரையாண்டு தேர்வு காலத்தில் மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி
அரையாண்டு தேர்வு காலத்தில் மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி
அரையாண்டு தேர்வு காலத்தில் மாணவர்களுக்கு திருக்குறள் போட்டி
ADDED : டிச 12, 2024 05:15 AM
காரைக்குடி: பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடந்து வரும் நிலையில், திருக்குறள் போட்டிக்கான அறிவிப்பு வெளியானதால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் போட்டி நடத்தப்படுகிறது. இதில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, கட்டுரை, ஓவியம், கவிதை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம் பெற்றுள்ளன.
இவற்றை டிச. 18ம் தேதிக்குள் வீடியோ ஆடியோ அல்லது பி.டி.எப்., வடிவில் சம்மந்தப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த டிச.9 ஆம் தேதி முதல் பள்ளிகளில் அரையாண்டு நடந்து வருகிறது. அரையாண்டு தேர்வுக்கு மாணவர்கள் தீவிரமாக படித்து தேர்வு எழுதி வருகின்றனர்.
திருக்குறள் போட்டி தேர்வால் திருக்குறளில் ஆர்வமுள்ள மாணவர்கள் தேர்வுக்கு படிப்பதா திருக்குறள் போட்டிக்கு தயாராவதா என்ற குழப்பத்தில் உள்ளனர்.