ADDED : டிச 31, 2025 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் கன்னியாகுமரி 133 அடி திருவள்ளூவர் சிலை வெள்ளிவிழாவை முன்னிட்டு திருக்குறள் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்த்துறைத் தலைவர் ராஜலெட்சுமி வரவேற்றார். முதல்வர் நளதம் தலைமை வகித்தார். தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் வள்ளுவரின் ஆட்சிநெறி குறித்து பேசினார்.
ஆசிரியர் பயிற்றுநர் காளிராசா திருவள்ளுவர் காட்டும் அன்பு நெறி குறித்து பேசினார்.தமிழ்துறை தலைவர் சேவியர் ராணி திருக்குறள் சுட்டும் பெண்கள் குறித்து பேசினார். விரிவுரையாளர் சித்ரா நன்றி கூறினார்.

