நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: இளையான்குடி ஒருங்கிணைந்த தேவேந்திர குல வேளாளர்கள் சமுதாய சங்க கூட்டம் வட்டார சங்க தலைவர் செல்வம் மற்றும் துணை தலைவர் குமரவேல் தலைமையிலும், சங்க செயலாளர் தங்கவேல் மற்றும் பொருளாளர் தனசேகர் முன்னிலையிலும் நடைபெற்றது.
கூட்டத்தில் அடுத்த கட்ட வளர்ச்சி, சங்க பதிவு, பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர் தேர்வு, சட்ட ஆலோசகர் குழு தேர்வு, ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் சேர்த்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. வழக்கறிஞர் கஜேந்திரன் நன்றி கூறினார். ஏற்படுகளை இளையராஜா மற்றும் ஜெயபால் செய்திருந்தனர்.

