/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கோயில் சன்னதி முன் குப்பை திருப்புவனம் பக்தர்கள் அதிருப்தி
/
கோயில் சன்னதி முன் குப்பை திருப்புவனம் பக்தர்கள் அதிருப்தி
கோயில் சன்னதி முன் குப்பை திருப்புவனம் பக்தர்கள் அதிருப்தி
கோயில் சன்னதி முன் குப்பை திருப்புவனம் பக்தர்கள் அதிருப்தி
ADDED : ஆக 12, 2025 05:52 AM

திருப்புவனம் : திருப்புவனம் புஷ்ப வனேஷ்வரர்--சவுந்தரநாயகி அம்மன் கோயில் சன்னதி முன்பாக கொட்டப்படும் குப்பையால் துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர்.
காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலம் என திருப்புவனம் போற்ற படுகிறது. மறைந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கிய பின் பக்தர்கள் பலரும் புஷ்பவனேஷ்வரரை வழிபட்டு செல்கின்றனர்.
நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். பிரதான கோபுரம் வழியாக உள்ளே நுழைந்து புஷ்பவனேஷ் வரரை தரிசனம் செய்த பின் சவுந்தரநாயகி அம்மன் சன்னதி எதிரே உள்ள கோபுரம் வழியாக வெளியேறுவது வழக்கம்.
சன்னதி எதிரே தினசரி குப்பை கொட்டப்படு கின்றன. எச்சில் இலைகள், பிளாஸ்டிக் கழிவு, பழ கழிவு என ஏராளமானவை கொட்டப்படுவதால் நிரந்தரமாக துர்நாற்றம் வீசி வருகிறது. பக்தர்கள் நிம்மதியாக அம்மனை தரி சனம் செய்ய கூட முடிய வில்லை. அம்மன் சன்னதி அருகே அன்னதானம் நடத்தப்படுவது வழக்கம்.
குப்பையில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால் அன்னதானம் சாப்பிட முடியாமல் பக்தர்கள் தவிக்கின்றனர்.