/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு பஸ்களில் திருப்புவனம் பயணிகளை ஏற்ற மறுப்பு : கண்காணிக்க ஊழியர்கள் இல்லாததால் அரசுக்கு வருவாய்

ADDED : மே 28, 2025 11:35 PM

திருப்புவனம்: அரசு பஸ்களில் கிராமப்புற பயணிகளை ஏற்ற கண்டக்டர், டிரைவர்கள் மறுப்பதால் போக்குவரத்து கழகங்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி, முத்தனேந்தல் வழியாக பரமக்குடி, கமுதி, சாயல்குடி, ராமேஸ்வரம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
காரைக்குடி கோட்டத்தில் இருந்து தான் அதிகளவு பஸ்கள் இந்த தடத்தில் இயக்கப்படுகின்றன. கமுதி கிளை பஸ்கள் தவிர மற்ற கிளை கழக பஸ்களில் திருப்புவனம், திருப்பாச்சேத்தி பயணிகளை ஏற்ற மறுக்கின்றனர். மீறி ஏறினால்ரோட்டில் இறக்கி விடுவதுடன் கண்டக்டர், டிரைவர்கள் அவதுாறாக பேசுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையம், மானாமதுரை, பரமக்குடி உள்ளிட்ட இடங்களில் டிக்கட் பரிசோதகர்கள் முன்பு கண்காணித்து அனைத்து பயணிகளையும் பஸ்களில் ஏற்றி செல்ல நடவடிக்கை எடுப்பார்கள்.
கடந்த சில மாதங்களாக டிக்கெட் பரிசோதகர்கள் போதிய அளவில் இல்லாததால் யாரும் இருப்பதில்லை. பயணிகளை ஏற்ற மறுப்பதுகுறித்து புகார் தெரிவித்தாலும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காததால் டிரைவர், கண்டக்டர்களின் அடாவடி அதிகரித்து வருகிறது. அரசு பஸ்களை தவிர்த்து பலரும் தனியார் பஸ்களைநாடி செல்கின்றனர். இதனால் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது.
தனியார் பஸ்களில் படிகளில் பயணிகள் தொங்கிசெல்லும் அளவிற்கு உள்ள நிலையில் அரசு பஸ்கள் பல காலியான பஸ்களாக செல்கின்றன. கிராமப்புற நிறுத்தங்களை புறக்கணிக்கும் அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.