/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் பயணிகளுக்கு பஸ்களில் அனுமதி இல்லை
/
திருப்புத்துார் பயணிகளுக்கு பஸ்களில் அனுமதி இல்லை
திருப்புத்துார் பயணிகளுக்கு பஸ்களில் அனுமதி இல்லை
திருப்புத்துார் பயணிகளுக்கு பஸ்களில் அனுமதி இல்லை
ADDED : பிப் 01, 2025 05:05 AM
திருப்புத்துார்: மதுரை எம்.ஜி.ஆர். பஸ் ஸ்டாண்டில் தனியார் மற்றும் அரசு பஸ்களில் திருப்புத்துார் பயணிகள் முதலில் ஏற கண்டக்டர்கள் அனுமதிப்பதில்லை. பஸ்சின் வாயிற்படியில் நின்று பயணிகள் செல்லும் ஊரைக் கேட்டே அனுமதிக்கின்றனர். குறிப்பாக கூட்டம் அதிகமாக உள்ள விழா,முகூர்த்த,விடுமுறை நாட்களில் இவ்வாறு நடக்கிறது.
துாரத்திலுள்ள ஊர்களுக்கு செல்லும் பயணிகள் அனைத்து இருக்கைகளிலும் அமர்ந்த பின்னர், பஸ் புறப்படும் போது மட்டுமே திருப்புத்துார் பயணிகளை பஸ்சில் ஏற அனுமதிக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் பல முறை போராட்டம் நடத்தி, அதிகாரிகள் சமாதானக் கூட்டங்கள் நடத்தியுள்ளனர். முதலில் வருபவர்க்கு முதல் அனுமதி என்பதும்,பஸ்சில் ஏறுவதையும், அமர்ந்த பின் கீழே இறங்கச் சொல்லக் கூடாது என்றும் பஸ் பணியாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சமாதான ஒப்பந்தத்தை தனியார் பஸ்கள் மீறுவதும், பயணிகள் பாதிக்கப்படுவதும் தொடர்கிறது.
தற்போது அரசு பஸ்களிலும் இந்த முறையை கடைபிடிக்கத் துவங்கியுள்ளனர். மதுரை மட்டுமின்றி காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்டிலும் இம்முறையைக் கடை பிடிக்க செய்கின்றனர். போக்குவரத்து அதிகாரிகள் தலையிட்டு இதற்கான நிரந்தர தீர்வை செயல்படுத்த வேண்டியது அவசியமாகும்.