/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் சீதளி கீழ்கரை நான்கு ரோடு சந்திப்பு; விபத்தை தடுக்க போலீஸ் கண்காணிப்பு அவசியம்

ADDED : அக் 08, 2025 12:52 AM

திருப்புத்துார்; திருப்புத்துாரில் சீதளி கீழ்கரை பகுதியில் உள்ள நான்கு ரோடு சந்திப்பில் போக்குவரத்து குளறுபடியை கட்டுப்படுத்த போலீஸ் கண்காணிப்பு கூண்டு அமைக்க அப்பகுதியினர் கோரியுள்ளனர்.
திருப்புத்துாரில் முக்கிய போக்குவரத்து சந்திப்புக்களில் சீதளி கீழ்கரை பகுதியிலுள்ள நான்கு ரோடு சந்திப்பும் ஒன்றாகும். இங்கு புதுக்கோட்டை ரோடு, சிங்கம்புணரி ரோடு, காரைக்குடி ரோடு, மதுரை ரோடு சந்திக்கின்றன. இந்த சந்திப்பில் காலை முதல் இரவு வரை டூ வீலர், கார், வேன், டிராக்டர் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்த சந்திப்பில் காரைக்குடி,சிங்கம்புணரி ரோடுகளில் வரும் வாகனங்களுக்கு மற்ற ரோடுகளில் வரும் வாகனங்கள் தெரிய வாய்ப்பில்லை. இது போல் தான் மற்ற ரோடுகளில் வருபவர்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை.
சந்திப்புக்கு அருகில் வரும்போது மற்ற வாகனங்கள் வருவது தெரிகிறது. இதனால் ரோட்டில் எதிரெதிராகவும், குறுக்காகவும் வாகனங்கள் மோதும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. தற்போது சிறு, சிறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. இரவு நேரங்களில் மிகவும் சிரமமாகி விடுகிறது. இதற்கிடையில் சைக்கிள் மற்றும் பாதசாரிகளும் செல்வதால் ஆபத்தான சந்திப்பாக மாறி விட்டது.
பெரிய விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க இப்பகுதியில் போலீஸ் பீட் அமைத்து போக்குவரத்து கண்காணிப்பை மேற்கொள்ள அப்பகுதியினர் நீண்ட காலமாக கோரி வருகின்றனர். போக்குவரத்து குளறுபடியை கட்டுப்படுத்த போலீஸ் பீட் அமைப்பதுடன், கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.