/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம்
/
திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம்
திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம்
திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழா தேரோட்டம்
ADDED : ஜூன் 12, 2025 02:04 AM

காரைக்குடி: காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு தங்க அங்கி அலங்காரத்தில் ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீனிவாச பெருமாள்எழுந்தருளினார்.
இக்கோயிலில் மே 3 ம் தேதி கொடியேற்றத்துடன் வைகாசி திருவிழா துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் ஸ்ரீதேவி பூதேவியருடன் திருவேங்கடமுடையான் சிம்மம், அனுமன், யானை உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது. ஜூன் 8 ல் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று மாலை தேரோட்டம் நடந்தது. ேநற்று காலை அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, தேவியருடன் எழுந்தருளினார்.
அதனை தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. நான்கு ரத வீதிகளை சுற்றி, தேர் நிலையை அடைந்தது. ஜூன் 14 ல் தெப்ப உற்ஸவமும், ஜூன் 15 ல் புஷ்ப பல்லக்கு, விடையாற்றி உற்ஸவத்துடன் திருவிழா நிறைவு பெறும். பரம்பரை அறங்காவலர் முத்துமீனாட்சி, செயல் அலுவலர் விநாயகவேல் ஆகியோர் ஏற்பாட்டை செய்து வருகின்றனர்.