
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை அருகே வேம்பத்தூர் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் திருவோண பூஜை நடைபெற்றது.
இங்குள்ள பூமி நீளா சமேத சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், தயிர், மஞ்சள், திரவியம் அபிேஷகமும், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
கோயில் முன் மண்டபத்தில் ஸ்ரீதேவி பூதேவியருடன் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார். சுவாமிக்கு தீபாராதனை காண்பித்தனர். கோயில் அர்ச்சகர்கள் ஏற்பாட்டைசெய்திருந்தனர்.