/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
செவ்வந்தி பயிரிட்டவர்கள் கவலை விலை, விளைச்சல் இல்லை
/
செவ்வந்தி பயிரிட்டவர்கள் கவலை விலை, விளைச்சல் இல்லை
செவ்வந்தி பயிரிட்டவர்கள் கவலை விலை, விளைச்சல் இல்லை
செவ்வந்தி பயிரிட்டவர்கள் கவலை விலை, விளைச்சல் இல்லை
ADDED : நவ 19, 2024 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி தாலுகாவில் விவசாயிகள் சிலர் செவ்வந்திப் பூக்களை தோட்டப்பயிராகவும், ஊடுபயிராகவும் சாகுபடி செய்துள்ளனர். ஐப்பசி கார்த்திகை மாதங்களில் செவ்வந்திப் பூக்கள் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் வெளியூர்களில் இருந்து நாற்றுகளை வாங்கி வந்து நடவு செய்தனர்.
ஆனால் ஓரிரு எடுப்பு எடுத்த நிலையில் மழை, பனியால் செவ்வந்தி விளைச்சல் பாதித்துள்ளது. அதே நேரம் விலையும் எதிர்பார்த்ததை விட கட்டுப்படியாகாத சூழலில் உள்ளது. இதனால் செவ்வந்தி பயிரிட்டவர்கள் கவலையில் உள்ளனர்.