/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை பூக்கடைக்காரர் கொலையில் மூவர் கைது
/
சிவகங்கை பூக்கடைக்காரர் கொலையில் மூவர் கைது
ADDED : டிச 28, 2024 01:24 AM

சிவகங்கை:சிவகங்கையில் பூக்கடைக்காரர் வெங்கடேஷ் 28, கொலை வழக்கில் கூலிப்படையினர் 7 பேர் உட்பட 12 பேருக்கு தொடர்புள்ள நிலையில் நேற்று 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை அருகே மேலவாணியங்குடி முருகேசன் மகன் வெங்கடேஷ் இளையான்குடி ரோட்டில் பூக்கடை வைத்திருந்தார்.
டிச.19 இரவு 8:30 மணிக்கு கடையில் இருந்து டூவீலரில் மேலவாணியங்குடி சென்றார். ஆர்ச் அருகே எதிரே வந்த கார், டூவீலரில் மோதியது. அதிலிருந்து இறங்கிய 7 பேர் வாள், அரிவாளால் வெட்டி வெங்கடேசை கொலை செய்தனர்.
வெங்கடேஷ் மீது 2022ல் மதுரை திருப்பாலை போலீசில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். இப்பகை காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இதில் தொடர்புடைய ராமநாதபுரம் மாவட்டம் மும்முடிசாத்தான்பட்டி ராஜபிரபுவை 35, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவரது தகவலின்படி மதுரை மாவட்டம் திருமோகூர் நொண்டிகோயில் தெரு சின்னமாணிக்கம் மகன் மணிமாறன் 37, ராஜூ மகன் மாணிக்கம் 48, மதுரை மாவட்டம் அச்சம்பட்டி மணியோசை மகன் ராஜீவ் காந்தி 40, ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். கூலிப்படையினர் உட்பட மேலும் 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கைமாறிய ரூ.10 லட்சம்
வெங்கடேஷ், தன் அத்தை மகள் வைஷ்ணவி கணவர் செந்தில்குமாரை 2022ல் வெட்டியுள்ளார். இந்த முன்பகை காரணமாக சிங்கப்பூரில் இருந்த செந்தில்குமார், நண்பர் ராஜபிரபுவை தொடர்பு கொண்டு வெங்கடேசை கொலை செய்ய கூறியுள்ளார்.
இதற்காக கூலிப்படையை தயார் செய்ய ரூ.15 லட்சம் பேசி அட்வான்ஸாக ரூ.10 லட்சம் அனுப்பியுள்ளார். இப்பணத்தை பெற்ற ராஜபிரபு, நண்பர் மணிமாறன் மூலம் கூலிப்படை தலைவர் பாலமுருகனை தொடர்பு கொண்டு, வெங்கடேசை கொலை செய்ய கூறியுள்ளார்.
அதன்படி இக்கொலை நடந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.